Friday, February 6, 2009

வள்ளுவர் வாக்கு


2. பொருட்பால் (2. Wealth)
2.1 அரசியல் (2.1 Royalty)
2.1.1 இறைமாட்சி (2.1.1 The Grandeur of Monarchy)

_____________________________________________________________

386. காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்

மீக்கூறும் மன்னன் நிலம்

(That land prospers where the king is to see, not harsh of words.)

_____________________________________________________________

ஒரு நாட்டை ஆளும் அரசனாக இருப்பவர் காட்சிக்கு எளிமையானவனவராக‌வும் மக்களிடம் கடும் சொல் பேசாதவராக‌வும் இருக்கவேண்டியது அவசியம். அவ்வாறு இருக்கும் அரசரை இந்த உலகம் போற்றி புகழும் என்பது வள்ளுவர் வாக்கு. நடைமுறை வாழ்க்கையில் எடுத்துக் கொண்டால் தனிப்பட்ட மன்னர்கள் கிடையாது எனினும் தலைவர்களாக இருப்பவர்களை மன்னர் என்ற இடத்தில் ஒப்பிட்டு நோக்கலாம்.

உதாரணமாக தமிழக சினிமாவில் மிகவும் புகழ் பெற்ற‌ நடிகராக விளங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காட்சிக்கு எளிமையானவராகவும் யாரிடமும் கடுஞ்சொல் பேசாதவராகவும், மிக எளிமையாக‌ எல்லோரிடமும் பழகுபவராக இருப்பதாலேயே உலகம் முழுவதும் அவருக்கு தனி மரியாதையும் புகழும் பரவியிருப்பதைப் பார்க்க முடிகிறது.

இவ்வாறு குறளின் ஒவ்வொரு பாடலும் அதன் பொருளும் எக்காலத்திற்கும் ஏற்புடையதாக இருப்பதாலேயே வள்ளுவர் வாக்கு மிக உயர்ந்து நிற்கிறது.